தமிழ்த்துறை

      2012-ம் ஆண்டு முதல் எம் கல்லூரியின்‌ தமிழ்த்துறை மாணவர்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. “உ.வே.சா. தமிழ் இலக்கிய மன்றம்” துவங்கப்பட்டு பருவத்திற்கு இரண்டு கருத்தரங்கங்களும், பட்டிமன்றங்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இவ்விழாவிற்கு வேறு கல்லூரிகளிலிருந்தும் சிறந்த பேச்சாளர்கள் அழைக்கப்படுகின்றனர்.
புகழுடன் வாழ்ந்து மறைந்த சிறந்த தலைவர்களின் நினைவாகப் பல போட்டிகள் நடத்தப்பட்டு மாணவியர் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவற்றைத் தவிர பிற கல்லூரிகளில் நடைபெறும் மாநிலக் கருத்தரங்கம், தேசியக் கருத்தரங்கம் மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்களிலும் பங்கு பெற மாணவியர் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பிற தமிழ் வளர்ச்சிக் கலகங்களில் நடத்தப்படும் பல்துறைப் போட்டிகளில் எமது மாணவியர் வெற்றி பெறும் வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்து அவர்களைச் சாதனையாளர்களாக மாற்றி சமுதாயத்தில் உயர்ந்த தலைவர்களிடத்தில் பரிசு பெற வழிகாட்டப்படுகிறது.

அடைவுத் திறன்


கல்வி அடைவுத் திறன்
      கடந்த ஆண்டு 2015 – 2016 ஆம் ஆண்டில் தமிழ்த்துறை மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பல்கலை அடைவுத்திறன்
      பன்னிரண்டு வகையான தமிழ் வளர்ச்சிக் கலகங்கள் நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான கவிதை , கட்டுரை, ஓவியம் , பேச்சுப் போட்டிகளிலும் மற்றும் நடனப் போட்டிகளிலும் எமது மாணவியர் பங்கு பெற்று பரிசுகள், பதக்கங்கள் மற்றும் ரொக்கத்தொகையையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கலை மற்றும் இலக்கிய அடைவுத்திறன்
      கருத்தரங்கக் கட்டுரை வழங்குதல், பட்டிமன்றம், வினாடி – வினா ஒரு வார்த்தை ஒரு லட்சம், பழமொழி கோர்த்தல் போன்ற கலை, இலக்கியத் திறன்களிலும் எமது மாணவியர் பங்குபெற்று முத்திரை பதித்துள்ளனர்.

விளையாட்டு அடைவுத்திறன்
      கபடி ,கோ-கோ மற்றும் தனி விளையாட்டுகளிலும் எமது மாணவியர் பல்கலைக்கழக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவை தவிர பல கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.